Breaking News

  • 1 : ஒகி புயலில் சிக்கி மீண்டு வந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க கோரிக்கை
  • 2 : heading news
  • 3 : heading news
3–வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நத்தம் (திண்டுக்கல்), சென்னை, நெல்லை ஆகிய 3 ஊர்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 15–வது ஆட்டம் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. இதில் மதுரை பாந்தர்ஸ், வி.பி.காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் அணி கேப்டன் அபராஜித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.இதையடுத்து மதுரை பாந்தர்ஸ் அணி பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் முதல் ஓவர் 2–வது பந்திலேயே தொடக்க வீரர் அருண்கார்த்திக் 4 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து கேப்டன் ரோகித்துடன், தலைவன் சற்குணம் ஜோடி சேர்ந்தார். இருவரும் ஏதுவான பந்துகளை மட்டும் அடித்து ஆடினர். இதனால் மதுரை அணி 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் சேர்த்தது. இரண்டு முறை (12 ரன், 45 ரன்) கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய தலைவன் சற்குணம் சிக்சர் விளாசி அரைசதத்தை கடந்தார்.இதற்கிடையே கேப்டன் ரோகித் 32 ரன்களிலும் (30 பந்துகளில் 4 பவுண்டரி), அடுத்து வந்த சுஜித்சந்திரன் 5 ரன்னிலும் (8 பந்துகளில் 1 பவுண்டரி) வெளியேற, சிறிது நேரத்தில் தலைவன் சற்குணம் 62 ரன்களில் (40 பந்துகளில் 1பவுண்டரி, 7சிக்சர் ) கேட்ச் ஆனார். இதனால் மதுரை அணியின் ரன்வேகம் குறைந்தது.பின்னர் வந்த கவுசிக் 27 ரன்களும் (20 பந்துகளில் 3 பவுண்டரி), கார்த்திகேயன் 6 ரன்களும், நிலேஷ் சுப்ரமணியன் 2 ரன்களும், கிரன் 1 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். தன்வர் 22 ரன்களும் (10பந்துகளில் 3சிக்சர்), வருண் சக்ரவர்த்தி 1 ரன்னும் எடுத்து களத்தில் நின்றனர். 20 ஓவர்கள் முடிவில் மதுரை பாந்தர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்தது.இதையடுத்து ரன்கள் 168 இலக்கை நோக்கி காஞ்சி வீரன்ஸ் அணி விளையாடியது. தொடக்க வீரர்களான சுப்பிரமணி சிவா 8 ரன்களும் ( 6 பந்துகளில் 1 சிக்சர்), விஷால்வைத்யா 31 ரன்களும் (34 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பின்னர் கேப்டன் அபராஜித் 29 ரன்களிலும் (27 பந்துகளில் 2 சிக்சர்), ரோகின்ஸ் 7 ரன்களிலும் (5 பந்துகளில் 1 சிக்சர்) வெளியேற 15.3 ஓவர்களில் காஞ்சி வீரன்ஸ் அணி 100 ரன்களை கடந்தது.இதற்கிடையே மோகித் 34 ரன்களில் (27 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்க காஞ்சி அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அந்த அணி வெற்றிபெற கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை மதுரையின் தன்வர் வீசினார். அந்த ஓவரில் ஷாம் (6 ரன்கள்) விக்கெட்டை இழந்ததோடு 17 ரன்கள் மட்டுமே கிடைத்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் காஞ்சி வீரன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. சஞ்சய் 34 ரன்களுடனும் (18 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர்) லிங்கேஷ் ரன் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இதன்மூலம் மதுரை பாந்தர்ஸ் 3–வது அசத்தல் வெற்றியை பெற்றது. Add new comment
இந்தியா - எஸ்செக்ஸ் அணிகள் இடையிலான மூன்று நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி செம்ஸ்போர்டில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிக்கு அங்கீகாரம் கிடையாது என்பதால் இந்திய அணியில் 18 வீரர்களையும் பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்பட்டது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி திணறியது. ஷிகர் தவான் (0), புஜாரா (1 ரன்), துணை கேப்டன் ரஹானே (17 ரன்) ஆகியோர் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி நடையை கட்டினர்.இதன் பின்னர் 4-வது விக்கெட்டுக்கு முரளிவிஜயும், கேப்டன் விராட் கோலியும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டதுடன், அரைசதமும் கடந்தனர். விஜய் 53 ரன்களிலும் (113 பந்து, 7 பவுண்டரி), கேப்டன் கோலி 68 ரன்களிலும் (93 பந்து, 12 பவுண்டரி) ஆட்டம் இழந்தனர்.இவர்களுக்கு பிறகு வந்த லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் அரைசதத்தை எட்டினர். ராகுல் 58 ரன்களில் (92 பந்து, 12 பவுண்டரி) கேட்ச் ஆனார். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 84 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்துள்ளது. தினேஷ் கார்த்திக் 82 ரன்களுடனும் (94 பந்து, 14 பவுண்டரி) ஹர்திக் பாண்ட்யா 33 ரன்களுடனும் (6 பவுண்டரி) களத்தில் உள்ளனர். 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும். Add new comment
3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.இந்த நிலையில் நெல்லை சங்கர் நகரில் இன்று (வியாழக்கிழமை) இரவு நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, கோவை கிங்ஸ் அணியை சந்திக்கிறது.கோபிநாத் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இதுவரை ஆடிய 3 லீக் ஆட்டங்களிலும் (திருச்சி வாரியர்ஸ், மதுரை பாந்தர்ஸ், காரைக்குடி காளைக்கு எதிராக) தோல்வியையே சந்தித்துள்ளது. அதே சமயம் அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி முதல் லீக் ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் காரைக்குடி காளை அணியை வென்றது. அடுத்த 2 ஆட்டங்களில் திண்டுக்கல் டிராகன்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகளிடம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு 8 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்சை வீழ்த்தி கோவை அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியது.சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை பொறுத்தவரை எஞ்சிய 4 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். எனவே இன்றைய ஆட்டம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு வாழ்வா?-சாவா? போட்டியாகும். அதனால் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இருக்கும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்த முயற்சிக்கும்.நெல்லை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது. எனவே முந்தைய ஆட்டத்தில் நன்றாக செயல்பட்ட மணிகண்டன், அஜித்ராம், ராஜேஷ் ஆகிய 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் கோவை கிங்ஸ் அணி களம் இறங்கும். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அலெக்சாண்டர், எம்.அஸ்வின் ஆகிய சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். எனவே இந்த ஆட்டத்தில் சுழலுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கலாம். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பீல்டிங் மற்றும் பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.இந்திய ‘ஏ’ அணிக்கு தேர்வாகியிருந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஆல்- ரவுண்டர் விஜய் சங்கர் முதல் 3 ஆட்டங்களில் ஆடவில்லை. தற்போது தாயகம் திரும்பி விட்டாலும் காயம் காரணமாக இன்றைய ஆட்டத்திலும் அவர் விளையாட வாய்ப்பில்லை.இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3 முறையும், கோவை கிங்ஸ் அணி ஒரு தடவையும் வெற்றி பெற்றுள்ளன. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. Add new comment

All Right Reserved by Jden technologies.in