Breaking News

  • 1 : ஒகி புயலில் சிக்கி மீண்டு வந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க கோரிக்கை
  • 2 : heading news
  • 3 : heading news
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் அறக்கட்டளை என்ற அமைப்பை ஆரம்பித்து ரூ.37 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது என்றும், முன்னாள் தலைவரும் திரைப்பட இயக்குனருமான விசு, முன்னாள் செயலாளர் பிறைசூடன், அறங்காவலர் மதுமிதா ஆகியோர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்றும் மனுவில் குறிப்பிட்டு உள்ளார். இதற்கு பதில் அளித்து இயக்குனர் விசு கூறியிருப்பதாவது:–‘‘எனக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறேன். இயக்குனர் பாக்யராஜ் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்குச் சென்று என் மீது பண மோசடி புகார் அளித்து இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. அறக்கட்டளையில் எந்த மோசடியும் நடக்கவில்லை. பணம் கையாடல் செய்யப்படவும் இல்லை. அந்த பணம் வங்கியில் பத்திரமாக இருக்கிறது. அதில் வரும் வட்டியில் நலிந்த எழுத்தாளர்களுக்கு உதவிகள் செய்யப்படுகின்றன. பாக்யராஜ் என்மீது போலீசில் புகார் அளித்ததன் மூலம் மனிதாபிமானம் செத்துப்போய் விட்டதாக நினைக்கிறேன். ஆண்டவன் கருணையால் உடல்நலம் தேறி திரும்பி வருவேன். அப்போது இந்த மோசடி புகாரை எதிர்த்து நிற்பேன். நான் நாணயத்தோடு பிறந்தவன். நிறைய பேருக்கு கல்வி உதவிகள் வழங்கி வருகிறேன். நேர்மையாக வருமான வரி கட்டுகிறேன். சங்க அறக்கட்டளையில் இருந்து ஒரு பைசா கூட எடுத்தது இல்லை.’’இவ்வாறு விசு கூறியுள்ளார். Add new comment
கமல்ஹாசன் டைரக்டு செய்து கதாநாயகனாகவும் நடித்திருக்கும் ‘விஸ்வரூபம்-2’ படம், அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. இது தொடர்பாக அவர், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-“விஸ்வரூபம் முதலாம் பாகத்தின் தொடர்ச்சியாக ‘விஸ்வரூபம்-2’ படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக முயற்சித்து இருக்கிறோம். இது, அரசியலுக்கு அப்பாற்பட்ட படம். இந்தியா-பாகிஸ்தான் இரண்டாக பிரிந்து கிடப்பதற்கு மத அரசியல் ஒரு காரணம். அதில் எனக்கு வருத்தம் உண்டு. அதன் அடிநாதம்தான் இந்த படம்.‘விஸ்வரூபம்-2’ படத்தில், நான் காஷ்மீர் இந்தியா முஸ்லீமாக நடித்து இருக்கிறேன். படம் தாமதமானதில் வருத்தம் இருக்கிறது. என்றாலும், படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. படத்தில், அரசியல் தொடர்பான வசனங்களை சேர்க்கவில்லை. படம் தணிக்கை செய்யப்பட்டு விட்டது. ‘யு ஏ’ சான்றிதழ் கிடைத்து இருக்கிறது.நான், அரசியலுக்கு வரும் முன் படத்தை எடுத்து முடித்து விட்டேன். அமெரிக்காவுக்கு ஆதரவாக படத்தை எடுக்கவில்லை. இந்த படத்தின் மூன்றாம் பாகம் எடுப்பதும், எடுக்காததும் ரசிகர்கள் படத்துக்கு கொடுக்கும் வரவேற்பை பொருத்து அமையும்.ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு மக்கள் பணி செய்வேன் என்று சொல்வதெல்லாம், பொய். என் தொழில், சினிமா. எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்த பிறகும் தொடர்ந்து நடித்தார். அவரைப்போல் கட்சி பணிகள் செய்து கொண்டே சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். என்னால் இயலாது என்று தெரியும்போது, நடிப்பதை விட்டு விடுவேன்.சினிமா என் தொழில். அதில், நான் வசதியாக இருக்கிறேன். இவரிடம் பணம் இருக்கிறது. ஊழல் பண்ண மாட்டார் என்ற நம்பிக்கையில்தான் பொதுமக்கள் எனக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். எஞ்சிய வாழ்க்கையில்தான் நான் அரசியலில் ஈடுபடுகிறேன்.நடிகர் சங்கத்தில், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுகிற மாதிரி பல நல்ல விஷயங்களை செய்து இருக்கிறார்கள். அவர்களே தொடர்ந்து பதவியில் நீடிப்பதில், எனக்கு கருத்து வேறுபாடு இல்லை.என் வாழ்க்கையில் தாயாக, தங்கையாக, மகளாக நிறைய பெண்கள் இருக்கிறார்கள். என் மகள் சுருதிஹாசனின் எதிர்காலத்தை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.”இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.பேட்டியின்போது நடிகை பூஜா குமார், இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகிய இருவரும் கமல்ஹாசன் அருகில் அமர்ந்திருந்தார்கள். Add new comment
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தை நடிகர் சூர்யா தயாரித்து உள்ளார். இந்த படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சத்யராஜ், பொன்வண்ணன், சரவணன், சூரி, இயக்குனர்கள் பாண்டிராஜ், இரா.சரவணன், நடிகைகள் சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா பினு, விஜி சந்திரசேகர், பானுப்பிரியா, மவுனிகா, இசை அமைப்பாளர் இமான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.இந்த விழாவில் விவசாயத்தில் சாதனை படைத்த நெல் ஜெயராமன், ஆலங்குடி ஆர்.பெருமாள், திருவலஞ்சுழி சேகர், விதை நெல் விஜயலட்சுமி, மரம் தங்கசாமி மகன் கண்ணன் ஆகிய 5 பேருக்கு நடிகர் சூர்யா தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினார். மேலும், அவர் விவசாய வளர்ச்சிக்கு ரூ.1 கோடி நிதி உதவியும் வழங்கினார்.இதையடுத்து நடிகர் சூர்யா பேசியதாவது:-தமிழ்நாட்டில் டாக்டர்கள், என்ஜினீயர்கள் பலர் உள்ளனர். ஆனால் ஒரு விவசாயியை கொண்டு வருவது கடினமான விஷயமாக உள்ளது. இந்த படம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் அன்புதான். எங்களைவிட அதிகமாக வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள்தான். அதனால் தான் ரூ.1 கோடியை அவர்களுக்கு வழங்கி உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, ‘நாங்கள் தற்போது ‘ஸ்டாப்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளோம். இதன் மூலம் ஒயிட் சுகரின் பயன்பாட்டை நிறுத்துவது, மஞ்சளை நமது தினசரி வாழ்க்கையில் எடுத்து வருவது போன்ற பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம். மேலும், தானியங்களின் முக்கியத்துவம் பற்றியும் இந்த அமைப்பு மக்களிடம் கொண்டு சேர்க்கும்’ என்றார்.விவசாயத்தில் சாதனை படைத்த 5 பேரை தேர்வு செய்த ‘கத்துக்குட்டி’ திரைப்பட இயக்குனர் இரா.சரவணன் பேசும்போது, விவசாயத்தில் சாதனை படைத்த இந்த 5 பேரும், வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்கள்தான்.விவசாய வளர்ச்சிக்காகவும், விவசாயிகளுக்கு உதவவும் நடிகர் சூர்யா ரூ.1 கோடி நிதி உதவி அறிவித்து இருக்கிறார். இன்னும் பல கோடி ரூபாய் வரை செலவு செய்து விவசாயிகளுக்கு உதவ அவர் திட்டமிட்டு உள்ளார்’ என்றார்.  Add new comment

All Right Reserved by Jden technologies.in