Breaking News

  • 1 : ஒகி புயலில் சிக்கி மீண்டு வந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க கோரிக்கை
  • 2 : heading news
  • 3 : heading news
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையை அடுத்து அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின.  இதனால் அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
 
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக கடந்த 17-ந் தேதி இரவு 9 மணிக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதையடுத்து கடந்த 19-ந் தேதி, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது அணையின் நீர்மட்டம் 109 அடியாக இருந்தது.
 
இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 23ந்தேதி 120 அடி என்ற முழு கொள்ளளவை எட்டியது.
 
மேட்டூர் அணை இதற்கு முன் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி தனது முழு கொள்ளளவை எட்டியிருந்தது. அதன்பிறகு 5 ஆண்டுகளுக்கு பின்னர் அணை மீண்டும் நிரம்பியுள்ளது.
 
இந்த நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைந்தது.  இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
 
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 80,291 கன அடியில் இருந்து 48,065 கன அடியாக குறைந்துள்ளது.  அணையில் நீர் இருப்பு 93.93 டி.எம்.சி.யாக உள்ளது.  மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 46,422 கன அடியாக உள்ளது.  எனினும், அணையின் நீர்மட்டம் 120.22 அடியில் இருந்து 120.29 அடியாக உயர்ந்துள்ளது
 
மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு 850 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

 

Add comment


Security code
Refresh

All Right Reserved by Jden technologies.in