Breaking News

  • 1 : ஒகி புயலில் சிக்கி மீண்டு வந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க கோரிக்கை
  • 2 : heading news
  • 3 : heading news
Slide show: Yes
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. கடந்த மே மாதத்தில் இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது.  பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டு வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
 
இதனை தொடர்ந்து விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது.  பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.  கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை விலையில் ஏற்றம், இறக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து 3-வது நாளாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 79.18 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 71.59 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

Add comment


Security code
Refresh

All Right Reserved by Jden technologies.in